
திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியே தீ காடாகக் காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வரை இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் திருமண மண்டபத்தில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.