Skip to main content

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை; சிறப்பு அறிவிப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Telangana Govt announced a special notification on A baby born at a bus station

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக இந்த பேருந்து நிலையத்திற்கு வந்தார். 

அப்போது குமாரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதில் பதற்றமடைந்த அவரது கணவர் உதவிக்காக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்தார். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானதால், அங்கிருந்த போக்குவரத்துக் கழக பெண்கள் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில், குமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, தாயையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்து நிலையத்திலேயே பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்த சம்பவம் அம்மாநிலம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் ஒரு அற்புதமான அறிவிப்பை அறிவித்தது. அதில், பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

போலீஸுக்கு வந்த பரபரப்பு வீடியோ; நடவடிக்கை எடுப்பதற்கு முன் நடந்த பகீர் சம்பவம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
couple decide incident at telangana

தெலுங்கானா மாநிலம், கோத்தகிரி காவல் துணை ஆணையர் சந்தீப்புக்கு, இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் நின்று பேசியபடி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அந்த இளம்பெண், நீண்ட காலத்திற்கு முன் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அதனை அவருடைய கணவர் மன்னித்து விட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், ‘தன்னுடைய குடும்பத்தினர் பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வந்ததால் மன உளைச்சலில் ஆளான நாங்கள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட சந்தீப், உடனடியாக காவல் துணை ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து தம்பதியரின் தற்கொலையை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, உள்ளூர் போலீசாரும் கோதாவரி ஆற்று பகுதியில் தம்பதியரை தேடி வந்துள்ளனர். ஆனால், அவர்களை கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து, அவர்களின் செல்போன் சிக்னலை அடிப்படையாக கொண்டு தேடினர். அதன்படி, போலீசார் தேடியதில் ரெயில் தண்டவாளத்தில் செல்போன் இருப்பதாக காண்பித்தது. ரெயில் தண்டவாளத்தில் சென்று பார்த்தபோது தம்பதியர் இருவரும் இறந்துகிடந்து உடல்கள் மட்டும் கிடந்தன.

அதனையடுத்து, அந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நிஜாமாபாத் மாவட்டம் ஹெக்தோலி பகுதியைச் சேர்ந்த அணில் (28) என்பதும், அவருடைய மனைவி சைலஜா (24) என்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த அன்று வீட்டை விட்டு வெளியேறிய தம்பதி, போலீஸுக்கு வீடியோவை அனுப்பிவிட்டு நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது. போலீஸுக்கு வீடியோ அனுப்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

குழந்தையைக் கடித்துக் குதறிய தெருநாய்; பதைபதைக்க வைக்கும் வீடியோ

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
A stray dog ​​that bit a child; shocking video

தெரு நாய்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சாலையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதோடு இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கவே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

A stray dog ​​that bit a child; shocking video

தெலுங்கானா மாநிலம் மங்கிலி என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதோடு இழுத்துக் கொண்டு ஓட முயன்றது. உடனடியாக அங்கிருந்த முதியவர் ஒருவர் நாயை விரட்டி விட்டார். பின்னர் குழந்தை மற்றும் முதியவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 18 மாத  குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.