Skip to main content

ராகுலை தொடர்ந்து அடுத்ததாக சிக்கப்போகும் எதிர்க்கட்சித் தலைவர்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Tejashwi Yadav will appear before CBI for questioning  connection withland for Job scam case

 

பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அப்போது ரயில்வே பணிநியமனத்தின் போது பீகாரில் நிலங்களை வாங்கிக் கொண்டு பலருக்கு பணிநியமனம் செய்ததாகக் கூறி லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 15 ஆம் தேதிக்குள் அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே லாலு பிரசாத்தின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தற்போது தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

 

இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அவரது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதால் எந்த பயனும் இல்லை” - இந்தியா கூட்டணி தலைவர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 India Alliance leader omar abdullah says There is no point in criticizing PM Modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தங்களுக்கான ஆதரவை பெருக்கி வருகின்றன. மேலும், தொகுதி வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் இணைந்துள்ளார். 

இந்த நிலையில், அண்மையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, “மோடிக்கு குடும்பம் இல்லை” என்று கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் பலர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்று மாற்றி எதிர்வினையாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று (09-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், லாலு பிரசாத் யாதவ்வின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இத்தகைய கோஷங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதனால், நமக்கு எந்தவித பயனும் இல்லை. இதுபோன்ற கோஷங்கள், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. மோடியின் சொந்த வாழ்க்கையை தாக்கி, வழிமறிக்க ஆளில்லாத கோல் போஸ்டை அவருக்கு கொடுத்துவிட்டோம். அதை அவர் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் 140 கோடி மக்கள் தனது குடும்பம் தான் என்று பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது நம்மிடம் அதற்குப் பதில் இல்லை” என்று கூறினார்.

Next Story

ரூ. 820 கோடி பரிவர்த்தனை; வெளியான அதிர்ச்சி தகவல்! 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
820 crore transaction; Shocking information released

யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் 41 ஆயிரம் பேரின் கணக்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் ரூ. 820 கோடி பரிவர்த்தனை நடைபெற்றன. இதேபோன்று பிற வங்கிகளில் இருந்தும் 14 ஆயிரம் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது குறித்து யூகோ வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் யூகோ வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தனிநபர் தொடர்பான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக இரண்டாவது நாளாக ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் 67 இடங்களில் இன்று (07.03.2024) சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

மத்திய ஆயுத படையினர், காவலர்கள், சிபிஐ அதிகாரிகள் கொண்ட 40 குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் யூகோ, ஐடிஎப்சி ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரு ஹார்டு டிஸ்க், 40 செல்போன்கள், 43 டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.