Skip to main content

தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Tejashwi Yadav was interrogated by the Enforcement Directorate for 9 hours

 

பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அப்போது ரயில்வே பணி நியமனத்தின் போது பீகாரில் நிலங்களை வாங்கிக் கொண்டு பலருக்கு பணி நியமனம் செய்ததாகக் கூறி லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தனியே விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அங்கு தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடந்த மாத இறுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அகிலேஷ்; சம்மன் அனுப்பிய சி.பி.ஐ

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
CBI summons Akhilesh Yadav for malpractice suit

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், பொதுப்பணித்துறையினர் சட்டவிரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசியப் பதுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருந்த போதும் சட்டவிரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை நடத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், சி.பி.ஐ கடந்த 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்வர் அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று (29-02-24) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 7 முறை அவர் ஆஜராகாத நிலையில், 8வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ex-DMK MLA acquitted in case

கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன். மெக்கானிக் தொழில் செய்து வந்த புவனேஸ்வரன் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மர்ம கும்பல் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நிலத்தகராறு தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் சையது இப்ராஹிம், செல்வம், முரளி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவருடைய பெயர் இல்லை எனவே இதை ரத்துசெய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புவனேஸ்வரனின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்து சிபிஐ விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு முறையாக விசாரணை செய்யப்பட்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம் உள்ளிட்ட 12 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் முன்னாள் எம்எல்ஏ உட்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி கே.ரவி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.