Skip to main content

வீடியோ காலில் மனைவி; துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட வாலிபர்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

A teenager passed away for extramarital affair in uttar pradesh

 

உத்தர பிரதேசம் மாநிலம், பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு (30). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாவண்யா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சோனு கடந்த 9 மாதங்களாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. 

 

இதனையடுத்து, கணவரின் உறவை தெரிந்து கொண்ட லாவண்யா சோனுவை பலமுறை கண்டித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சோனுவின் குடும்பத்தினர் முதற்கொண்டு சோனுவை கண்டித்துள்ளனர். ஆனால், சோனுவின் மறைமுக உறவு நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளது. இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் சோனு, தனது காதலியுடன் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சோனுவை அவரது மனைவி லாவண்யா செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டிருக்கிறார். வீடியோ காலை எடுத்த பின்பு சோனுவின் காரில் அந்த இளம்பெண் இருப்பதை பார்த்த லாவண்யா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனு, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார். 

 

இதில் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த அந்த இளம்பெண், அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சிலர், சோனுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சோனுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சோனு வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முகமது ஷமியின் சாதனையால் சாதிக்கப் போகும் கிராமம்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

The village is going to achieve with the achievement of Mohammed Shami!

 

இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்கு திரும்பினார். காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். சிறப்பான செயல்பாட்டின் காரணமாக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார்.

 

முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம் பிடித்தார். உலக கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் இவரின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முகமது ஷமியின் சொந்த ஊரான சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சகஸ்பூர் அலிநகர் கிராமத்தில் மிகச் சிறிய அளவிலான ஒரு கிரிக்கெட் மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, ஷமியின் கிராமம் அமைந்திருக்கும் அம்ரோஹா மாவட்டத்தின் ஆட்சியர் ராஜேஷ் தியாகி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ஏழைகளின் திருவிழா எப்போது?” - அயோத்தி தீபோற்வசத்தை பகிர்ந்த அகிலேஷ் யாதவ்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Akhilesh Yadav sharing the Ayodhya incident and ask When is the Festival of the Poor?

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டினர். இது தொடர்பான வீடியோ  சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் தங்களது கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்து வருகின்றனர். 

 

இது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தெய்வீகத்தின் மத்தியில் வறுமை.., வறுமை ஒருவரை விளக்குகளில் இருந்து எண்ணெய்யை எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தினால், அந்த கொண்டாட்டத்தின் ஒளி மங்கலாகிறது. இது போன்ற திருவிழா வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆனால், அதில் கிடைக்கும் வெளிச்சத்தால் இது போன்ற இடங்கள் மட்டுமல்ல, ஏழைகளின் வீடுகளிலும் ஒளிர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து, மற்றொரு பதிவில் ஒரு பெண் விளக்குகளில் இருந்து எண்ணெய்யை சேகரிக்கும் போது காவலர் ஒருவர் அவரை மிரட்டுவதும், அப்பெண் அக்காவலரை கையெடுத்து கும்பிடும் காட்சிகளை பகிர்ந்த அகிலேஷ் யாதவ், “அப்பெண் உதவியற்றவர் என்பதால் கைக்கூப்பி அனுமதி கேட்கிறார். ஏழைகளின் திருவிழா எப்போது? என்று பதிவிட்டுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்