மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோக்னா ராஜ். இவர் மீது வரிமான வரித்துறையினர் 132 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான கரும்பு விவசாயியான அவருக்கு 132 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பல கோடி ரூபாய் பண பறிமாற்றம் செய்துள்ளீர்கள் என்றும், அதில் 132கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மாதம் ஏழாயிரம் சம்பாதிக்கும் என்னை பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். என்னுடைய பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கலாம். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.