Skip to main content

“தமிழகம் புதுச்சேரிக்கு 300 ஏக்கர் கொடுக்கவேண்டி இருக்கிறது” - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

 "Tamil should give 300 acres to Puducherry" Tamilisai Soundarrajan

 

புதுச்சேரியில் மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கான மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். 

 

இதன் பின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “300 ஏக்கர் நிலம் தமிழகத்திலிருந்து வர வேண்டி இருக்கிறது. தமிழகம் அந்த 300 ஏக்கரை நமக்குக் கொடுத்தார்களானால் விரிவாக்கம் என்பது புதுவைக்கு மட்டும் பலன் தருவதாக இருக்காது. தமிழகத்திற்கும் சேர்த்துத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ஜிப்மர் மருத்துவமனையை எடுத்துக் கொள்ளலாம். போன வருடம் ஜிப்மர் மருத்துவமனையில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

 

ஆகப் புதுவையில் எந்த மேம்பாடு செய்தாலும் அது தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் பலன் தருவதாக இருக்கிறது. புதுவையில் விமான நிலையம் வரும்பொழுது தமிழக மக்கள் அதைப் பயன்படுத்துவார்கள். புதுவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் தமிழக வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும். இவ்விஷயத்தை வியாபார ரீதியாகத் தமிழகம் அணுகாமல் வளர்ச்சி ரீதியில் அணுக வேண்டும். 

 

மாநிலத்தின் வருமானத்தை உயர்த்த வேண்டும். மாநிலத்தின் ஒரு பகுதி வரி தானே. நெடுநாளாக அது ஏற்றப்படாமல் இருக்கிறது. மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் அது ஏற்றப்படும். மீண்டும் அந்த வரி நிறைவேறும் திட்டங்களாக மக்களைத்தான் போய்ச் சேரப்போகிறது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்