Skip to main content

சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்... நெகிழ்ச்சி தருணம்...

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு காலமானார்.

 

sushma swarajs daughter fulfils her last wish

 

 

இறப்பதற்கு முன்பாக அவர் போனில் கடைசியாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உடன் பேசியுள்ளார். பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவுக்காக அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி தந்தவர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே. அந்த வழக்கில் வாதாடுவதற்காக பேசிய ஊதியமாக ஒரு ரூபாயை அடுத்த நாள் மாலை வந்து வாங்கிக்கொள்ளும்படி சுஷ்மா அவரிடம் பேசியுள்ளார்.

அது ஒரு உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்ததாகவும், மேலும் அழைப்பை துண்டித்த 10 நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு வந்தாகவும் ஹரிஷ் சால்வே உருக்கமாக கூறினார். இதுவே சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையாக இருந்த நிலையில், தற்போது அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார் அவரது மகள்.

நேற்று வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு அவருடைய கட்டணமான ஒரு ரூபாய் நாணயத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்தார். இதனை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கூட்டணியைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Rahul Gandhi criticized Budget that will satisfy the coalition and save the seat

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்  மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம்  ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்; சாமானிய மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸின் தேர்தலை அறிக்கையையும், பழைய பட்ஜெட் உரையையும் வெட்டி ஒட்டி இணைத்துத் தாக்கல் செய்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட் '-கமல்ஹாசன் கருத்து

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'India alliance budget soon' - Kamal Haasan comments

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 'விரைவில் இந்தியா கூட்டணி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்' எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல் 2024 மத்திய பட்ஜெட் குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஆந்திரா பீகாருக்கு பட்ஜெட்; மற்ற மாநிலங்களுக்கு அல்வா' என விமர்சித்துள்ளார்.