census

இந்தியாவில்10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இறுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தாண்டு நடைபெறும்மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பாக அமையும்எனஅறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன், இந்தக் கணக்கெடுப்பிற்காக பட்ஜெட்டில் 3,768 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், நடைபெறவுள்ள 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி வாரியாககணக்கெடுக்க வேண்டும் எனக் கோரிஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், "கல்வி, வேலைவாய்ப்பு துறைகள், பஞ்சாயத்துத் தேர்தல்கள் மற்றும் நகராட்சித் தேர்தல்கள் தொடர்பான இடஒதுக்கீடுகளை செயல்படுத்துவதில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. மேலும் இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாதது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் சதவீதத்தை, அவர்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக தீர்மானிப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கைஇன்று (26.02.2021) விசாரித்தஉச்சநீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்குநோட்டீஸ்அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடியவிரைவில் தொடங்கும் எனஎதிர்பார்க்கப்டுகிறது.

Advertisment