Skip to main content

வாக்குச்சாவடிக்குள் நுழைய எம்.எல்.ஏவுக்கு தடை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Supreme Court action order andhra MLAs banned from entering polling booths

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதில் ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டசபைக்கும் கடந்த மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி, அம்மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம் பலவாக்கேட் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். அந்தப் புகாரையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டியை, போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது. எம்.எல்.ஏவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீதித்துறையின் கேலிக்கூத்து என்று கூறி, நாளை மச்சர்லா தொகுதியின் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் நுழையவோ அல்லது அதன் அருகில் இருக்கவோ கூடாது என்று ரெட்டிக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மத்திய பட்ஜெட்; ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.

அதில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகைக்கான மூன்று திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும். இவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பதிவுசெய்தல் மற்றும் முதல் முறையாக ஊழியர்களை அங்கீகரிப்பது மற்றும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தப்படும். 

Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை அனுமதியின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும். இது கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். சாலை இணைப்புத் திட்டங்களான பாட்னா - பூர்னியா விரைவுச் சாலை, பக்சர் - பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா - ராஜ்கிர் - வைசாலி - தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது கூடுதல் இருவழிப் பாலம் ஆகியவற்றை ரூ 26 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு முகமைகள் மூலம் சிறப்பு நிதி உதவியை எளிதாக்கப்படும்.  நடப்பு நிதியாண்டில், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் தொகைகளுடன் வரும் ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்படும். 

Central Budget Special allocation of funds for the states of Andhra and Bihar

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) காலக் கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அத்தகைய நிறுவனங்களின் கடன் அபாயங்களை குறைக்க இந்தத் திட்டம் செயல்படும். ஒரு சுயநிதி உத்தரவாத நிதி ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ. 100 கோடி வரையிலான காப்பீட்டை வழங்கும், அதே நேரத்தில் கடன் தொகை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பீர்பைண்டியில் புதியதாக 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும். பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் உதவிக்கான பீகார் அரசின் கோரிக்கைகள் விரைவுபடுத்தப்படும். இதற்காக பீகாருக்கு ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும்  மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

நீட் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET Exam Issue; Supreme Court Chief Justice barrage of questions

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுத் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இடையீட்டு மனுத் தாக்கல் செய்தனர் அதில், “நீட் தேர்வில்  650 முதல் 680 வரை என அதிக மதிப்பெண்கள் எடுத்த சுமார் 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி,  சந்திர சூட் , “தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பிகார் மாநிலத்தின் பாட்னா உள்ளிட்ட இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

The website encountered an unexpected error. Please try again later.