Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும்புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.