Skip to main content

மூச்சு திணறும் டெல்லி; நாளை மறுநாள் முதல் புது தடை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Suffocating Delhi; New ban from the day after tomorrow

 

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அவ்வப்பொழுது அபாய அளவை எட்டி நடுங்க வைக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை தற்பொழுது வரை தொடர்கதையாக உள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

கடந்த 2022 ஆம் எடுக்கப்பட்ட தரவுகளில் டெல்லியில் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டிருந்து. டெல்லி மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெளியான தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் ஒவ்வொரு தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மேலும் காற்று மாசு அதிகரிக்கும். டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவிலேயே உள்ளதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

 

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக நாளை மறுநாள் முதல் டெல்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழையக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் டீசல் பேருந்துகள் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் டீசல் பேருந்துகள் எல்லையோடு திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Cauvery Management Commission meeting in Delhi

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Next Story

நள்ளிரவு வரை 8 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Rain in 8 districts till midnight

தமிழகத்தில் கடந்த மே,  ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நள்ளிரவு வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.