Skip to main content

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கம்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

Spyjet made an emergency landing due to smoke!

 

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்ததால், டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

 

அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானம் சுமார் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென புகை வருவதைப் பார்த்தனர். இது குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. 

 

பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை - அயோத்தி இடையே நேரடி விமான சேவை!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Direct flight service between Chennai - Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பகத்ர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்  ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று (01.02.2024) முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 03.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதே விமானம் மறுமார்க்கமாக மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 06.20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தால் பரபரப்பு!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

spicejet plane landed in Pakistan causing excitement!

 

துபாய்க்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு (SpiceJet) சொந்தமான பி737 என்ற விமானம் (SpiceJet B737), இன்று (05/07/2022) காலை தலைநகர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானத்தின் இண்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.  விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர்; அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது" என்றார்.