Skip to main content

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்புட்னிக் லைட்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

sputnik light

 

இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிகளை தவிர ஸ்புட்னிக் v, மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் சோதனை ரீதியிலான விநியோகம் நடைபெற்று வருகிறது. விரைவில் வர்த்தக ரீதியிலான விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் பனேசியா பயோடெக் நிறுவனம், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட்டை தயாரித்துள்ளது. இந்தநிலையில் அத்தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி கோரி பனேசியா பயோடெக் நிறுவனம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் அவசரகால அனுமதி கிடைத்ததும், செப்டம்பர் மாதத்திலிருந்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுவது தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசியின் விலை 750 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

Next Story

தடுப்பூசியின் முக்கியத்துவம்: திருச்சி மருத்துவர் விளக்கம்

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

Importance of vaccine: Trichy doctor explanation

 

திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் மருத்துவர் முகமது ஹக்கீம் தடுப்பூசியின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அதில் அவர் தடுப்பூசியின் அவசியத்தைக் கொண்டு செல்லும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருவதால் பாதுகாப்பிற்காக உலக சுகாதார அமைப்பும், சுகாதார அமைச்சகமும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. 

 

தடுப்பூசி எனப்படுவது நோய் கிருமியின் செயலிழக்கபட்ட ஒரு சிறிய பாகத்தினை உடலில் செலுத்தி, அதனால் உடல் எதிர்ப்பு ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்திருப்பது. நோய் கிருமி தாக்குதல் ஏற்படும்போது தாயாராக உள்ள ஆண்டிபாடிகள் அவற்றை அழித்து விடும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒவ்வொரு விதமான ஆயுட்காலம் உண்டு, கரோனா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் பொழுதே அதன் ஆயுட் காலம் சில மாதங்கள் என அறிவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

 

நோய் கிருமி மரபணு உருமாற்றம் அடைவதனால் ஏற்படும் விளைவுகளே இந்தப் புது புது அலைகளுக்கு காரணம். உருமாற்றம் அடைந்து இருந்தாலும் மூலக்கூறு ஒன்று போல இருப்பதனால் இந்த உருமாற்றத்திற்கு எதிராக இந்தப் பூஸ்டர் தடுப்பூசி நன்கு வேலை செய்கிறது.  இந்தத் தடுப்பூசி/ பூஸ்டர் ஊசி எடுத்துக் கொள்வதால் சுமார் 85% மேற்பட்ட மக்கள் லேசான அறிகுறிகளுடன் நோய் ஏற்பட்டு, எளிதில் மீழ்கின்றனர்.

 

கரோனா நோயால் தீவிர சிகிச்சைப் பகுதியில் சேர்க்கப்படுபவர்களில் பத்தில் ஒன்பது நபர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள். எனினும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த ஒமிக்ரான் தொற்று இணை நோய், துணை நோய் உடையவர்களையும், வயோதிகர்களையும் அதிகம் பாதிப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. எனவே சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கோவிட் சமூக நெறிகளைக் கடைபிடிப்பது கட்டாயமாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.