Skip to main content

பிரதமர் மோடி தலைமையில் அரசியலில் குதிக்கும் கங்குலி?

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

ganguly modi

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இதய அடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அதே சமயம் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

 

இதனையொட்டி மேற்கு வங்க அரசியல் சூழ்நிலை, தொடர்ந்து பரபரப்பாகவே இருக்கிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 7 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். அப்போது கங்குலி, பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் இணைவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

இதுகுறித்து அம்மாநில பாஜக, கங்குலி பேரணியில் கலந்துகொள்வது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க பாஜகவின் செய்தித் தொடர்பாளர், சவுரவ் வீட்டில் ஓய்வில் இருப்பது எங்களுக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அவர் யோசித்தால், உடல்நலம் மற்றும் வானிலை அனுமதித்தால், அவர் மிகவும் வரவேற்கப்படுகிறார். அவர் அங்கு இருந்தால், அவர் அதை விரும்புவார் என்று நாங்கள் நினைக்கிறோம். கூட்டத்திற்கும் அது பிடிக்கும். ஆனால் இதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.