sonai gandhi may leave delhi for few days due to health issues

Advertisment

நாள்பட்ட மார்புத்தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மார்புத்தொற்று மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சோனியா காந்தி அவதிப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிது காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக ராகுல் காந்தியுடன் வெளிநாடு சென்றிருந்தார் சோனியா காந்தி. அதன்பிறகு நாடு திரும்பிய அவருக்கு, தற்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான காற்றுமாசு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரையை ஏற்று அவர் கோவா செல்ல தயாராவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் சோனியா காந்தி கோவாவில் சில நாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment