Skip to main content

தந்தையின் கனவை நிறைவேற்ற 63 வயதில் மருத்துவம் படிக்கும் மூதாட்டி

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

sixty three years old sujatha medical students viral karaikal medical college

 

மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (வயது 63). இவரது மனைவி சுஜாதா ஜடா (வயது 63). இவர் இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மருத்துவராக முடிவெடுத்தார்.

 

இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றார். இதனையடுத்து காரைக்காலில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சுஜாதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மருத்துவ மாணவியாக முதலாம் ஆண்டில் சுஜாதா கல்லூரியில் அடியெடுத்து வைத்தார்.

 

இந்நிலையில் தற்போது தனது 63 ஆம் வயதில் சுஜாதா மருத்துவம் படித்து வருவது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் வினோத் யாதவ் - சுஜாதா ஜடா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மருத்துவம் படிப்பது பற்றி சுஜாதா தெரிவிக்கையில், “நான் சிறுவயதில் இருக்கும் போது எனது தந்தை மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். அதனை நினைத்து பார்த்து அதற்காகத்தான் முறையாக மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். எனது கிராமத்தில் சிறு மருத்துவமனை ஒன்றை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Postponement of Masters NEET Exam

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டுள்ளார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

நீட்டுக்கு எதிரான வழக்குகள்; உச்சநீதிமன்றம் கைவிரிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'Interim injunction cannot be imposed'- Court gives a hand in cases against neet

நீட் முறைகேடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகளில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு குளறுபடிகள் நீட் தேர்வின் புனித தன்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதோடு நீட் தேர்வு தொடர்பான இந்த வழக்குகளின் அடுத்த விசாரணையை  ஜூலை எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான நீட் தேர்வுக்கு எதிரான தரப்பு வழக்கறிஞர்கள் நீட் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகிய காரணங்களால் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இது சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது எனவே கவுன்சிலிங்கை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.