/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1397.jpg)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 18 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரனுடன் சண்டை போட்டுக்கொண்டு செல்போனை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் என்ற ஊரில் 18 வயது சிறுமி ஒருவருக்கும்அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாகசிறுமி செல்போனை விழுங்கியுள்ளார். அதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடலில் இருந்து செல்போன் வெளியே எடுக்கப்பட்டது. மேலும், தற்போது சிறுமி நன்கு குணமடைந்து வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)