Skip to main content

சிக்கிம்: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; விபத்தினால் ஏற்பட்ட சோகம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Sikkim: 16 soldiers passed away; Tragedy caused by an accident

 

வடக்கு சிக்கிம் ஜமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள்  மரணம் அடைந்தனர்; விபத்தில் சிக்கிய 4 வீரர்கள் மீட்கட்டப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விபத்து நிகழ்ந்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 

அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர் கனமழை; இடிந்து விழுந்த பாலம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Continuous heavy rain Collapsed bridge

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதே போன்று டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 10 சேதம் அடைந்துள்ளது. அதோடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பீகாரில் 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பதவியேற்ற அடுத்தநாளே ராஜினாமா; சிக்கிம் முதல்வரின் மனைவி அதிரடி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

32 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வந்தது.  32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஏப்ரல் 19ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் அதிக பெரும்பான்மையாக 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகக் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, நேற்று முன் தினம் (12-06-24) சிக்கிம் மாநில சட்டசபையில் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 

Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் நேற்று (13-06-24) திடீரென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகச் சட்டசபை செயலாளர் உறுதி செய்தார். பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.