பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக சார்பில் எம்.பி யாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பாஜக வில் இருந்த அவர் பாஜக நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அக்கட்சிக்கு எதிராகவே கருத்துக்களை கூறி வந்தார்.

shatrughan sinha

Advertisment

இதனையடுத்து இந்த முறை பாஜக சார்பில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் பாஜக -விலிருந்து விலகி காங்கிரஸில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் சுர்ஜீவாலா முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.