mumbai

Advertisment

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்புமீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் இரண்டு கரோனாஅலைகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 3,900 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதில் மும்பையில் மட்டும் 2,510 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

அதேபோல் ஒமிக்ரான்பாதிப்பும் 250-ஐ கடந்துள்ளது. இதனையடுத்துமும்பை போலீஸார்அந்த நகரத்தில் இன்றுமுதல்ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் உணவகங்கள், பார்கள், பப்கள், கிளப்கள் உள்ளிட்ட மூடிய மற்றும் திறந்த வெளிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.