Second Phase Voting; Modi and Amit Shah are going to vote

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக இடையே மட்டும் இருந்து வந்த இந்தப் போட்டி இந்த முறை ஆம் ஆத்மி வந்ததால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

Advertisment

குஜராத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டசபைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது தொடங்கி இருக்கிறது. இன்று 93 தொகுதிகளில் நடக்கும் தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அகமதாபாத், காந்திநகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் வாக்களிக்க உள்ளார். அதேபோல் குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், காங்கிரசில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோர் இன்று வாக்களிக்க உள்ளனர். அதனால் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற 89 தொகுதிகளுக்கான முதல் கட்டவாக்குப்பதிவில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று சுமார் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில்போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1995 முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment