School, College Opening ... State Announcing Date!

புதுச்சேரியில் வரும் 17ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கரோனா தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளார்.

முதல்கட்டமாக ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment