கொய்யாப் பழம் வாங்கி தர மறுத்த ஆறாம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் குரேஷி என்ற மாணவர் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். உணவு இடைவெளியின் போது குரேஷி பள்ளிக்கு அருகில் கொய்யாப்பழம் விற்கும் கடைக்கு சென்று அங்கு கொய்யாப்பழம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் அங்கு வந்த சக மாணவர்கள் அவரிடம் தங்களுக்கும் கொய்யாப்பழம் வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் குரோஷி அதற்கு மறுத்துவிடவே அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமாக இருந்த சக மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரும் வழியில் குரோஷியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் குரோஷி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.