Skip to main content

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்துக” - கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

SC orders Karnataka govt to implement Cauvery Management Commission order

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து அன்றைய தினமே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.

 

அதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கி இருந்தனர். 

 

இந்த நிலையில் கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு சார்பில் குடிநீர் பிரச்சினை நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடிநீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று வாதிடப்பட்டது. இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூற முடியாது” என்று கூறியுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mild earthquake in Chengalpattu

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

Next Story

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Gauri Lankesh case and karnataka Cm siddaramaiah Order to set up a special court!

 

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தார்வாட்டில் உள்ள அவரது வீட்டில் அவரை சில அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மிக மோசமான இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு அப்போதைய கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் கொலை வழக்குகளோடு கவுரி லங்கேஷின் கொலைவழக்கும் ஒத்துப்போயுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்து யுவசேனா அமைப்பின் நிர்வாகி நவீன்குமார் (37) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு மெதுவாக நடப்பதாகவும், சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து முழு நேர நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, முதல்வர் சித்தராமையா நேற்று (06-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ‘எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில் இருவரது கொலை வழக்குகளையும் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இரு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், முழு நேர நீதிபதியை நியமிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.