நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுஉத்தரப்பிரதேச அரசு, விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்றஉயர் நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்றமே நியமிக்கலாம் என தெரிவித்தது.இதனையடுத்துயாரை நியமிப்பது என்பது குறித்து பரிசீலிக்க தங்களுக்கு ஒருநாள்அவகாசம் வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடத்தும் குழுவை மேம்படுத்த வேண்டும்என்றதோடுவிசாரணைக் குழுவில் சேர்ப்பதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேராத, உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தருமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று (17.11.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்றபஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றநீதிபதிராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வழக்கு விசாரணையைக் கண்காணிக்க நியமித்து உத்தரவிட்டனர். அப்போது, நீதியரசர் ஜெயின் கமிஷன்தம் விசாரணையில் பாரபட்சமற்ற தன்மையையும் சுதந்திரத்தையும் உறுதி செய்யும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும், வன்முறை குறித்து விசாரிக்கும் குழுவில்மூன்று மூத்த அதிகாரிகளையும் சேர்த்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டதும்இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.