Skip to main content

அந்தமானில் ஆட்டம் கண்ட சாவர்க்கர் விமான நிலையம்; திறந்த ஒரே வாரத்தில் பறந்த கூரைகள்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Savarkar Airport in Andaman; Roofs blown off in a week

 

பிரதமர் மோடி அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் வீர சாவர்க்கர் என்ற விமான நிலையத்தை ஒரு வாரத்திற்கு முன்பு காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்திருந்தார். ஏற்கனவே இருந்த விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு ஜூலை 18 ஆம் தேதி அன்றுதான் தொடங்கி வைக்கப்பட்டது. இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் அந்தப் பகுதியில் பெய்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரைகள் சரிந்து பறந்து விழுந்தன.

 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஏற்பட்ட இந்த பாதிப்பானது விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் மட்டும்தான் எனவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்காக அந்தப் பகுதி தளர்த்தி வைக்கப்பட்டிருந்த பொழுது காற்றால் கூரைகள் பிரிந்து சென்றதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார். அதே நேரம் 'வேலை முடிந்ததோ இல்லையோ தரம் குறைந்த கட்டுமானங்கள் எதை வேண்டுமானாலும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், ரயில்கள் என மோடி தொடங்கி வைப்பார்' என சிந்தியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விண்டோஸ் முடக்கம் எதிரொலி; சென்னையில் 8 விமானங்கள் ரத்து

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
echo windows shutdown; 8 flights canceled in Chennai

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்டோ செயலி முடக்கத்தால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக  சென்னையில் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் இதன் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.

மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, ஹைதராபாத், கோவை, பெங்களூர், லக்னோ, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் சேவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த கட்டமாக பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் நின்று உள்ளதால், செக் இன் படிவங்கள் கையால் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 விமானங்களின் பயண சேவைகள் தொடங்க தாமதமாகும் எனவும், இந்த தாமதத்தினால் சென்று சேர வேண்டிய இடத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மும்பை, லக்னோ, ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய எட்டு விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் சேவை மீண்டும் துவங்கிய பின் விமான சேவை சீராகும் எனவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
RSS leader who indirectly attacked PM Modi!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, ​​இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான். 

ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ்  நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும்.