
சசிகலாவுக்கு கரோனா பாதிப்பு அறிகுறிகள் முழுமையாக நீங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு அண்மையில் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவருக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.