Published on 06/10/2020 | Edited on 06/10/2020

சபரிமலையில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 16- ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையில் 10 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களையும், சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் 5,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பாதையில் பக்தர்கள் செல்லத் தடை விதிப்பதுடன், உடல் ஆரோக்கியப் பரிசோதனை நடத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.