rubber plantation worker arrested in kerala elephant incident

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ரப்பர் தோட்ட பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

Advertisment

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்ற போது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள ரப்பர் தோட்டம் ஒன்றில் பணியாற்றும் வில்சன் என்ற நபர் இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்ட மற்ற இரு நபர்களைஅதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.