rss to hold meeting nationwide

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாடு முழுவதும் வலுப்படுத்தும் நோக்குடன் இம்மாத இறுதி முதல் நாடு முழுவதும் 11 மண்டலங்களில் செயற்குழு கூட்டத்தை நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது.

Advertisment

வழக்கமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை சமயத்தில் நாட்டின் எதாவது ஒரு முக்கிய நகரில் நடைபெறும். இதில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவு கலந்துகொண்டு, அமைப்பின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை மேற்கொள்வர். இந்நிலையில், இதுவரை இல்லாதவகையில் முதன்முறையாக இந்த ஆண்டு நாடு முழுவதும் 11 மண்டலங்களில் செயற்குழு கூட்டத்தை நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.

Advertisment

வரும் அக்டோபர் 27 முதல் டிசம்பர் 6 வரையில் பாலக்காடு, ஹைதராபாத், அகமதாபாத், போபால், ஜெய்ப்பூர், பிரயாக்ராஜ், பாட்னா, குவஹாட்டி, குருகிராம், காஸியாபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுசெயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாடு முழுவதும் வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.