Skip to main content

எண்ண எண்ண குறையாத பணம்; கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.350 கோடி - சிக்கிய காங். எம்.பி

Published on 11/12/2023 | Edited on 12/12/2023
Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்த்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 350 crore has been seized from Congress MP dhiraj kumar sahu  house

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இது குறித்து உள்துறை அமைச்சர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய போது, “எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, எம்.பி., வீட்டில் இருந்து, இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது ஆனால் ஒட்டுமொத்த இந்தியக் கூட்டணியும் இந்த ஊழலைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால், ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழலின் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'விஜயதாரணி விவகாரத்தில் முடிவு இதுதான் '-சபாநாயகர் அப்பாவு பேட்டி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'This is the result of the Vijayatharani issue' - Speaker Appavu interview

காங்கிரஸில் இருந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி நேற்று பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் நெல்லையில் செய்தியார்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று சொல்லி அவர் இணைய வழியில் ஒரு தகவலை சட்டப்பேரவை தலைவருக்கும், சட்டப் பேரவையினுடைய முதன்மைச் செயலருக்கும் அனுப்பி இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி இணைய வழியில் என்னுடைய கவனத்திற்கும், சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளர் கவனத்திற்கு அனுப்பினார். இரண்டு செய்திகளையும் என்னுடைய கவனத்திற்கு முதன்மைச் செயலாளர் அனுப்பி வைத்தார். அதை நான் பரிசீலனை செய்து பார்த்ததில் விஜயதாரணி முறைப்படி தன்னுடைய கைப்பட பதவி விலகல் கடிதத்தை கொடுத்திருப்பதை தெரிந்து கொண்டேன். மேலும் இன்று காலை தொலைபேசியில் என்னை அழைத்து, 'நான் தான் அதை என் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டேன். ஆகவே காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்' என்பதை தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்துவிட்டார். அதன்படி விஜயதாரணியின் பதவி விலகலை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Vijayatharani resigned as MLA

கடந்த மூன்று முறை தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் விஜயதாரணி. இவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். அந்த பதவியும் கிடைக்காமல் போன பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதே சமயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று (24.02.2024) பிற்பகல் 2 மணியளவில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

காங்கிரசில் தான் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தையும் விஜயதாரணி வெளியிட்டு இருந்தார். அதே நரம் விஜயதாரணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கியதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் தெரிவித்திருந்தார். கட்சிதாவல் தடைச் சட்டத்திற்கு விஜயதாரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது. இந்தநிலையில் விஜயதாரணியே முன்வந்து அவருடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.