Skip to main content

'ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை'-ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

LOAN

 

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்களில்  மாற்றமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அது அப்படியே தொடரும்.ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கு கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாகவே தொடரும். வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ  வட்டி 3.35 சதவிகிதத்திலிருந்து 3.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1.4 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

1.4 crore issue 4 people incident including a BJP executive

 

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாய அணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

 

Next Story

அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

case file for employee of the financial institution

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய்க் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாகக் கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  வாங்கிய கடனை பிரபு முறையாகச் செலுத்தி வந்துள்ளார்.

 

அதன்படி கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாகப் பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையைக் கட்டியதால் வீட்டுப் பத்திரம் வேண்டும் எனத் தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் கடனைச் செலுத்தவில்லை எனக்கூறி இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த பிரபு, காவல்துறையில் இது குறித்து புகார் கொடுத்து தனது இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள், 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்திவிட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டி உள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திர பிரபு மது போதையில், பிரபுவின் வீட்டிற்குச் சென்று பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டுக் கடன் கட்டவில்லை' எனச் சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது, 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டும் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திர பிரபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.