Skip to main content

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Reservation of seats in Puducherry government school students in medical course

 

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

புதுச்சேரியில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக்கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் பரிந்துரையுடன் இது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆளுநரின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பான கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக்கல்விச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும்,  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் புதுச்சேரி மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்த 10% இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நனவாகும். அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இட ஒதுக்கீட்டிற்காக பணியாற்றிய  முதலமைச்சர் தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn

 

புதுச்சேரியில் ஒயின்ஷாப் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ளது பங்கூர். அந்த பகுதியில் பிரபு என்பவர் ஷங்கர் ஒயின்ஸ் என்ற தனியார் ஒயின்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பத்து மணிக்கு அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், ஒருவர் கீழே இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை கடையின் மீது வீசினார். அது பயங்கர சட்டத்துடன் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதோடு, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீசியது அதியூர் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பது தெரிய வந்தது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள இளைஞர் செல்வாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

salem omalur government school headmaster suspended

 

ஓமலூர் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மயில்வாகனன் (50) என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மயில்வாகனன் மீது அண்மையில் புகார்கள் கிளம்பின. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் அழுது புலம்பினார். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்திற்குத் திரண்டு சென்று ஆசிரியர் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, காவல்துறையினர் மயில்வாகனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதையடுத்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜூ அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வருவது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்