Skip to main content

'வீட்டில் சிக்கிய ரிமோட்; பேஸ்புக்கில் லைவ்'-கேரளா வெடிகுண்டு சம்பவத்தில் பரபரப்பு வாக்குமூலம்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

'The remote stuck in the house; 'Live on Facebook' - Sensational Confession in Kerala Bomb Incident

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

nn

 

இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல்நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்கட்ட விசாரணையில் அவர் முரணான தகவல்களை தெரிவித்ததால் நேரடியாக டொமினிக் மார்ட்டின் வீட்டிற்கே சென்ற போலீசார் அங்கு இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதேபோல் ரிமோட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம்  இயக்கி  வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் சரணடையும் முன்பே பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதேபோல் வெடிகுண்டு வைப்பதற்காக இணையதளத்தில் ஆறு மாதங்களாக தேடித்தேடி தகவல்களை திரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. 16 ஆண்டு உறுப்பினராக இருந்ததாகவும் சபை செயல்பாடு பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் டொமினிக் மார்ட்டின்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

8 வயது சிறுமியை இழுத்துச் சென்று சிறுவர்கள் செய்த கொடூரம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
 8-year-old girl incident at andhra pradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், நந்தியால மாவட்டம் முச்சுமரி பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், காலையில் வெளியே விளையாட சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காததால், அவர்கள் முச்சுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், மோப்பநாய் உதவியோடு போலீசார் தேடி வந்தனர். அதில் மோப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளது. 

அந்தச் சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. அதில், சிறுவர்களில் 2 பேர் 6ஆம் வகுப்பும், ஒருவன் 7ஆம் வகுப்பும், காணாமல் போன சிறுமி படித்த பள்ளியில் தான் படித்துள்ளார்கள். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஒதுக்குபுற இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்ற பயத்தில் சிறுமியை கொன்று அருகில் உள்ள கால்வாயில் உடலை வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 8 வயது சிறுமியை, சிறுவர்கள் மூவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'சிறுவனுக்கு பாலியல் தொல்லை; முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு'-விசாரணையில் சிக்கிய மர்ம காப்பகம்

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
More than 30 people lost their lives' - Mysterious archive caught up in the investigation

மனநல காப்பகம் என்ற பெயரில் அனுமதி பெறாமல் நடந்து வந்த இடத்தில் நிகழ்ந்த தொடர் உயிரிழப்புகளும், சிறுவனின் பாலியல் புகாரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது குந்தலாடி. இந்த கிராமத்தில் 'லவ் ஷேர்' அன்பை பகிர்வோம் என்ற பெயரில் மனநல காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த அந்த இடத்தை காப்பகம் என சொல்வதை விட அடைத்து வைக்கும் இடம் என்ற பெயரே பொருத்தமானதாக இருக்கும். அந்த அளவிற்கு காப்பகத்தில் நிகழ்ந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மொத்தம் 23 பேர் அந்த காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் பலர் இறந்ததாகவும் வெறும் 13 பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுவன், இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் என அந்த காப்பகத்தில் இருந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழு காப்பகத்திற்கு சென்று அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது காப்பகத்தின் அறையில் ஒரே ஒரு இரும்பு கட்டில் அதன் பக்கத்திலேயே திறந்த வெளியில் கழிப்பறை இருந்தது. சுகாதார வசதிகள், சரியான உணவு என எதுவும் இன்றி அங்கு இருந்தவர்கள் அடைத்து வைத்து கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

More than 30 people lost their lives' - Mysterious archive caught up in the investigation

அகஸ்டின் என்பவர் இந்த காப்பகத்தை நடத்தி வரும் நிலையில் ஆதரவற்றவர்கள், முதியவர்களை அடைத்து வைத்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தது. சோதனை செய்ய அதிகாரிகள் உள்ளே சென்ற பொழுது 16 வயதில் சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். சிறுவனிடம் அதிகாரிகள் கேட்ட பொழுது காப்பக உரிமையாளர் அகஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் என சிறுவன் அழுது புலம்பி இருக்கிறான். காப்பகத்திற்கு அருகிலேயே வனப்பகுதி உள்ள நிலையில், காப்பகத்தில் உயிரிழந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் அந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தொடர்பாகவும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுமையான ஆய்வில் காப்பகத்தில் எந்தவித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. கேரளாவிலும் ஒரு காப்பகம் ஒன்றை அகஸ்டின் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அங்கும் விசாரணை தீவிரப்படுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர். உடனடியாக அங்கிருந்த அனைவரும் மீட்கப்பட்டு கோவையின் உள்ள காப்பகம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. அரசினுடைய முறையான அனுமதி பெறாமல் இத்தனை ஆண்டுகள் இப்படி ஒரு காப்பகம் செயல்பட்டு வந்தது எப்படி? இதற்கு உதவியவர்கள் யார்? இங்கே அனுமதிக்கப்பட்டது உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தனர்? அவர்களுடைய விவரங்கள் என்ன? காப்பகத்தில் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றதா?  என பல்வேறு கேள்விகள் எழ,  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.