முக்கேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் க்ராப் ஏ க்ரப் (grab a grub) எனும் டெலிவரி சேவை நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.
மும்பை நிறுவனமான க்ராப் ஏ க்ருப் நிறுவனம் உணவு, ஆன்லைன் மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவை இந்நிறுவனம் டெலிவரி செய்துவருகிறது. இது தற்போது இந்தியாவில் 49 நகரங்களில் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது வாங்குவதற்கு முயற்சித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முக்கேஷ் அம்பானி கடந்த மாதம் குஜராத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.