Skip to main content

இந்தி தேசிய மொழியா? - கேஎஃப்சிக்கு எதிராக கொதிக்கும் கர்நாடகா!

Published on 25/10/2021 | Edited on 26/10/2021

 

KFC

 

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸோமேட்டாவின் வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், இந்தி தேசிய மொழி என்றும், அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளரிடம் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

 

தொடந்து சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக, வாடிக்கையாளர் சேவை மைய முகவரின் செயலுக்கு ஸோமேட்டா மன்னிப்பு கோரியது. இந்தநிலையில் பிரபல ஃபாஸ்ட் ஃபுட் உணவகமான கேஎஃப்சியும் அதேபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள கேஎஃப்சிக்குச் சென்றுள்ளார். அங்கு தொடந்து இந்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்தப் பெண் அங்குள்ள ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஊழியர், "நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியாவிற்கு வர உங்களுக்குப் பாஸ்போர்ட் தேவைப்படுகிறதா? இந்தி நமது தேசிய மொழி' என தெரிவித்துள்ளார்.

 

அதற்கு அந்தப் பெண், எங்களது மொழியே எங்களுக்கு முக்கியம் என பதிலளித்துள்ளார். கேஎஃப்சி ஊழியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், கேஎஃப்சி ஊழியர், இந்தி தேசிய மொழி என கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

இதனையடுத்து கன்னட மக்கள், கேஎஃப்சியைப் புறக்கணிக்குமாறு குரல் எழுப்பினர். அதனையொட்டி #Rejectkfc எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டானது. இந்தநிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக, கேஎஃப்சி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தில், தற்போது வைரலாகி வருவது பழைய வீடியோ என்றும், தற்போது அது மீண்டும் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள செய்தித்தொடர்பாளர், "கேஎஃப்சி இந்தியா அனைத்து சமூகங்களின் கலாச்சார விழுமியங்களுக்கும் உயர்ந்த மரியாதையைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு பிராண்டாக, எங்கள் நுகர்வோர் எப்போது, எங்குள்ள கேஎஃப்சிக்கு சென்றாலும் ஒரே மாதிரியான அனுபவம் பெறுவதை உறுதிசெய்வது எங்கள் முயற்சியாகும், எனவே தற்போது எங்களிடம் ஒரு பொதுவான பிளேலிஸ்ட் உள்ளது. அந்த பிளேலிஸ்ட் உரிமத்துடன் மொத்தமாக வாங்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள எங்கள் உணவகங்களில் ஒலிபரப்பப்படுகிறது" எனவும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.