tata

Advertisment

இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரானரத்தன்டாடா, சத்தமின்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார்.

மனிதாபிமானம் உள்ளதொழிலதிபராகப் போற்றப்படும் ரத்தன்டாடா, சமீபத்தில் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னிடம்வேலைசெய்த, உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரை, அவரது வீட்டுக்கேசென்றுபார்த்துள்ளார் ரத்தன் டாடா. இந்தச் சந்திப்பைமிகவும் ரகசியமாகவும், ஊடகங்களுக்குக் கூட தெரியாமல் வைத்திருந்துள்ளார் ரத்தன் டாடா.

83 வயதில், தன்னிடம்வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவரை,முன்னணித் தொழிலதிபர், எந்தப் புகழ் வெளிச்சமும்படாமல், சத்தமே இல்லாமல் வீடுதேடிச் சென்றுசந்தித்துள்ளது,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ரத்தன் டாடாவின்இந்தச் செயல் வெளிவந்ததும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.