bjp mp

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன்மூலமாகஅவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisment

12 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவி நீக்கத்தைதிரும்பப் பெற வேண்டும் எனகுடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களும்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயலைக் கண்டித்து பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.க்கள்போராட்டம் நடத்தியுள்ளனர்.