Rajya Sabha new members sworn in!

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பதவியேற்காதவர்களில் பலர் இன்று (18/07/2022) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

Advertisment

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (18/07/2022) தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களில் கடந்த முறை பதவியேற்காதவர்கள் இன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மாநிலங்களவைக் கூடியதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், இந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

Rajya Sabha new members sworn in!

தமிழகத்தில் இருந்து தி.மு.க.வைச் சேர்ந்த கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகமும் தமிழில் பதவிப் பிரமாணமும், உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் அண்மையில் மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment