Skip to main content

"இதனை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" - ராஜஸ்தான் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு...

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


ஊரடங்கு காலத்தில் ஏழைமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் போது அதனைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ராஜஸ்தானில் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 

 

rajasthan bans photos during helping needy

 

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசின் பரவலைக் கட்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தினக்கூலிகள் மற்றும் ஏழை மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அப்படிக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஒருசிலர், தேவையான பொருள் அல்லது உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இப்படி உதவி செய்வோரில் சிலர், தங்கள் உதவி செய்வதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வந்தனர். இம்மாதிரியான பதிவுகள் உதவி பெற்றவரின் மனதைக் காயப்படுத்தும் வகையில் அமைவதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஏழைமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் போது அதனைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ராஜஸ்தானில் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.  

 

http://onelink.to/nknappஇதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், "ஊரடங்கில் அவதியுறுபவர்களில் பலரும் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக அரசு மற்றும் சக பொதுமக்களையே நம்பியுள்ளனர். ஆனால், இதனை ஒரு காரணமாக வைத்து, அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களை அரசு இலவசமாக  அளிப்பதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கூடாது. அதேபோல பொதுமக்கள் மற்றும் சமூக சேவை மையங்களும் புகைப்படம், வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கைதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; பதட்டத்தில் சிறைச்சாலை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Prisoner lost their life in Rajasthan jail

ராஜஸ்தான் மாநிலம் கோட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அங்குர் படியா(43) என்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அங்குர் படியா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டையாக ராஸ்தான் உயர்நீதிமன்றம் குறைத்துத் தீர்ப்பளித்தது. அதன் பின்னர் அங்குர் படியா பைகானேர் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு, சங்கானேர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான் சங்கானேர் சிறைச்சாலையில் அங்குர் படியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் சிறைச்சாலையில் பெரும் பதட்டத்தை உருவாக்கிய நிலையில் கைதியின் கையில் எப்படி துப்பாக்கி வந்தது என்றும், எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

இளம்பெண்ணைக் கொலை செய்து எரித்த கொடூர குடும்பம்; விசாரணையில் திடுக் தகவல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A family who incident a teenage girl for love marriage

ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிம்லா குஷ்வாஹா (20) எனும் இளம்பெண். இவர் ரவீந்திர பில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷிம்லாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் விருப்பத்தை மீறி ஷிம்லா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பில்லை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி, மத்தியப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில். தம்பதி இருவரும் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை, கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றுள்ளனர். இதில் பதற்றமடைந்த கணவர் ரவீந்தர பில், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரி்ல், போலீசார் விசாரணை நடத்தியதில், ஷ்மிலாவை அவரது குடும்பத்தினரே கொலை செய்து சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருக்கும் ஷிம்லாவின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்றோர் விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.