rajasthan

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை, முதல் அலையைவிட வேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையைத் தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (14.04.2021) பிரதமர் மோடி, கரோனாபரவல் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனாபரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில், கரோனாஅதிகரித்து வருவதால்ராஜஸ்தான் மாநிலம் 12 மணி நேரஊரடங்கைஅறிவித்துள்ளது. மாலை 6 மணியிலிருந்து, காலை 6 மணிவரைஇந்த ஊரடங்கு அமலில் இருக்குமெனராஜஸ்தான் அறிவித்துள்ளது. இந்த 12 மணிநேரஊரடங்கு நாளை முதல் 30 ஆம்தேதி வரை அமலில் இருக்குமெனஅம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களை மூடவும், பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் ராஜஸ்தான் மாநிலம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் நேற்று ஒரேநாளில்6,200 பேருக்கு கரோனாஉறுதியானது குறிப்பிடத்தக்கது.

Advertisment