Skip to main content

பாரா ஒலிம்பிக்ஸில் சாதனை; வீரர்களுக்கு பரிசு அறிவித்த ராஜஸ்தான் முதல்வர்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

rajastan cm

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நிஷாத் குமார் உயரம் தூண்டுதலில் வெள்ளி வென்றார்.

 

ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார். அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதித்த தங்கள் மாநில வீரர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன்படி, தங்கப்பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ .3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ .2 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ஒரு கோடியும் பரிசாக வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாநிலங்களில் பாஜக- தெலுங்கானாவில் 'கை' பதித்த காங்கிரஸ்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

BJP in 3 states - Congress in Telangana

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 75 இடங்களிலும், மற்றவை 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 35 இடங்களிலும் மற்றவை  2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் முதன்முதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.

 

 

Next Story

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தேர்தல் முடிவுகள்; வெளியான முன்னிலை நிலவரம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 68 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக  7 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 125 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 102 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 82 இடங்களிலும், மற்றவை 15 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 52 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக 38 இடங்களில் முன்னணியில் உள்ளது.