Skip to main content

ரயில்டெல் ஐபிஓ வெளியீடு வெற்றி; நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

 Railtel wins IPO release; Listed on the stock exchange tomorrow!

 

பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன.

 

ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது. இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16- ஆம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 

மொத்தம் 87.15 மில்லியன் பொதுப்பங்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இவற்றில் 50 சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பிப். 18- ஆம் தேதியுடன் பொதுப்பங்கு விற்பனை முடிந்தது. பிப். 23- ஆம் தேதி முதலீட்டாளர்களுக்குப் பொதுப்பங்குகள் இறுதி செய்யப்பட்டன. ரயில்டெல் பங்குகள் வேண்டி மொத்தம் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

 

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஐடிபிஐ கேபிடல், எஸ்பிஐ கேபிடல் ஆகிய நிறுவனங்கள் இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கின்றன. கேபின் நிறுவனம் இதன் பதிவாளராக செயல்படும். இந்நிலையில், ரயில்டெல் ஐபிஓ இந்தியப் பங்குச்சந்தைகளில் நாளை (பிப். 26) பட்டியலிடப்படுகிறது.

 

பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் முன், விற்பனை செய்யப்படும் கிரே மார்க்கெட்டில் இப்பங்குகள் 108 ரூபாய் வரை கைமாறியிருப்பது சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.