இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச ஒப்பந்தத்தை மீறி அதிக எடை கொண்ட ஏவுகணையான ஆம்ராமைசுமக்கக்கூடிய எப்16 விமானங்களை இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் பயன்படுத்தி இருந்தது. இதில் ஒரு விமானத்தை இந்திய விமானப்படை வீரர்அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அந்த விமானத்தில் இருந்து விழுந்த ஏவுகணையின் உதிரிகளையே இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரானஆதாரமாக பயன்படுத்தி உள்ளது.

Advertisment

modi

பாகிஸ்தானின் 24 விமானங்கள்இந்தியாவை நோக்கி படையெடுத்த போது அவற்றை விரட்ட இந்தியா பயன்படுத்தியதும் மிக்21 மற்றும்சுகோய் விமானங்கள் தான்.

Advertisment

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி

ரஃபேல் விமானங்கள் இல்லாத குறையை இந்தியா உணருகிறது. ரஃபேல் இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என நாடே ஒருமித்த குரலில் பேசுகிறது என தெரிவித்தார். ரஃபேல் கொள்முதல் தொடர்பான அரசியல் காரணங்களால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்பிரதமர் மோடிக்கு வெட்கமே இல்லையா என கேள்வி எழுப்பிய ராகுல், ரஃபேல்விமானங்களின் விலையை ஏற்றி 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அனில் அம்பானியிடம் பிரதமர் மோடி கொடுத்ததாககுற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

ரபேல் விமானங்கள்வர தாமதம் ஆனதற்கு மோடியேமுழு முதல் காரணம் என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி காலாவதியான விமானங்களை பயன்படுத்துவதால் தான் அபிநந்தன்போன்ற வீரமிக்க இந்திய விமானப்படையினர் ஆபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.