கரோனா தடுப்பில் சேவையாற்றுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் கரோனா தடுப்புபணிகளை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளைத் தட்டுவதையும் விட கரோனாவுக்கு எதிராகப் போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கரோனாவுக்கு எதிராகப் போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.