Skip to main content

எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Rahul Gandhi welcomes Elon Musk's comment

மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது”எனக் கருத்து தெரிவித்திருந்தார். 

Rahul Gandhi welcomes Elon Musk's comment

இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இதனை வரவேற்கும் விதமாக அந்தப் பதிவை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு ‘கருப்பு பெட்டி’ ஆகும். அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. தேர்தல் ஆணையம் பொறுப்பபில்லாமல் செயல்படும் போது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை” - ராகுல்காந்தி உருக்கம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Rahul Gandhi wrote letter to wayanad people

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். 

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவைக் கடந்த 17ஆம் தேதி அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.  அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி கடந்த 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய அந்த கடிதத்தில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்து உங்கள் ஆதரவை கேட்டு வந்தேன். நான் உங்களுக்கு அந்நியனாக இருந்தாலும், நீங்கள் என்னை நம்பினீர்கள். அளவற்ற அன்புடனும் பாசத்துடனும் என்னைத் தழுவிக் கொண்டீர்கள். நீங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

நாளுக்கு நாள் நான் அவமானப்படும் போது, ​​உங்களுடைய நிபந்தனையற்ற அன்பு என்னைப் பாதுகாத்தது. நீங்கள் தான் என்னுடைய அடைக்கலம், என் வீடு, என் குடும்பம். நீங்கள் என்னைச் சந்தேகித்ததாக நான் ஒரு கணம் கூட உணரவில்லை. எனக்காக நீங்கள் செய்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தேவைப்படும் போது, நீங்கள் கொடுத்த அன்பு எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. நீங்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதி. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் எப்போதும் இருப்பேன்.

ஊடகத்தின் முன் நின்று எனது முடிவைச் சொன்னபோது என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களைப் பாதுகாக்க எனது சகோதரி பிரியங்கா காந்தி இருப்பார் என்பதால் ஆறுதல் அடைகிறேன். நீங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தால், அவர் உங்கள் எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.