
மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'தன் மீதான பதவி நீக்க நடவடிக்கை குறித்து நேற்று டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை'' என தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அதில் கமல்ஹாசன் நடிப்பில் வந்த விக்ரம் படத்தின் 'ஆரம்பிக்கலாங்களா' என்ற பிஜிஎம் சவுண்ட் ட்ராக்கை சேர்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)