Skip to main content

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொள்வாரா???

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
congress

 

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அடுத்த மாதம் நடத்த போகும் விழா ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது. 

இதற்கு இந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முறையின்படி அழைப்பு விடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்படுவார் என்று தெரிவித்தது.  

 
கடந்த வாரம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை கடுமையாக சாடி, பின்னர் தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் இந்த இயக்கத்தை ஒப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த விழாவில் எப்படி கலந்துகொள்வார், கலந்து கொள்ளக்கூடாது என்று பல்வேறு விதமான கோணங்களில் தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கையில், "கற்பனையான  கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது. நீங்கள் குறிப்பிடும்படியான எந்த அழைப்பையும் நாங்கள் பெறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பிதழ் ஏதாவது வந்தால் மட்டும் இதுகுறித்து உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது நிச்சயமாக முறையான பதில் கிடைக்கும். அப்போது உங்கள் அனைவருக்கும் அந்தப் பதில் பகிரப்படும்'' என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திடம் இருந்து அழைப்பு வந்தால், கலந்து கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்