/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-punjab-art_0.jpg)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர்'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகசெயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானதுபஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்துதனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான்ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர்மாவட்டம் சாம் கவுர்சாகிப் என்றபகுதியை சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத்சிங்க் என்பவரை போலீசார்கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்த போது லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல் நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்துகாவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவலர்கள் லவ் ப்ரீத்சிங்கை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் லவ் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிடுவித்து உள்ளனர்.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, அம்ரித் பால்சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில்அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின்பிடியில் இருந்து தப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நேற்று நண்பகல் 12 மணி வரை என 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பதற்றமான சூழல் அங்கு நிலவுவதால் இன்று நண்பகல் 12 மணி வரை இணைய சேவைகள் முடக்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர்மாவட்டத்தில் உள்ள நாகோர் காவல் நிலையத்தில் அம்ரித் பால் சிங்கின் மாமாவும், அவரின் கார் டிரைவரும் போலீசில் சரணடைந்தனர். இந்த தகவலை ஜலந்தர் ஊரக காவல்துறை உயரதிகாரியான ஸ்வாரந்தீப் சிங் உறுதி செய்துள்ளார். இதனால் பஞ்சாபில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)